தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று முன்தினம் தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. மாணவரணி, இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com