சென்னையில் சிஜேபிக்கு ஆதரவாக திமுக போராட்டம்

சென்னை பெசண்ட் நகரில் கரப்பான் பூச்சி ஜனதாவுக்கு ஆதரவாக திமுகவும் போராட்டத்தில் ஈடுபட்டது
சென்னையில்  சிஜேபிக்கு ஆதரவாக  திமுக போராட்டம்
Published on: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் என நாடுமுழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது.

போலீஸ் குவிப்பு

இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இதனால், டெல்லி முழுவதும் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 23 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புகாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

அபிஜித் தீப்கே கைது

மேலும், டெல்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு பல பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. போராட்டம் நடத்த வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த அபிஜித் தீப்கேவும் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

திமுக போராட்டம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக சென்னை பெசண்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சென்னை பெசண்ட் நகரில் கரப்பான் பூச்சி ஜனதாவுக்கு ஆதரவாக திமுகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. திமுக எம்பி ஆ.ராசா, தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com