முதல்-அமைச்சர் பேச்சை கண்டித்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் பேச்சை கண்டித்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி, தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரை பற்றி சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன்படி சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேபோல சென்னை தெற்கு, தென்கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை கலைஞர் பொன்வளைவு அருகில் இன்று காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் (சென்னை தெற்கு), மயிலை த.வேலு (தென்கிழக்கு), சிற்றரசு (மேற்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com