திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது - கே.பி.முனுசாமி

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருந்தது.
திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது - கே.பி.முனுசாமி
Published on

சென்னை,

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடந்தது. இதில் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தேர்தலின்போது சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? மாதம் ஒருமுறை மின் கட்டணம் அளவீடு செய்யப்படும். இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்றார்.

ஆனால் இப்போது 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு. ஆயிரம் யூனிட்டுக்கு எங்கள் ஆட்சியில் ரூ.6.20 ஆனால் இப்போது ரூ.11. இதனால் மாதம் ரூ.4500 கூடுதல் செலவு. பால் விலை உயர்த்தியதையும் சேர்த்தால் மாதம் ரூ.6 ஆயிரம் மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்றார்கள் தந்தார்களா?.

இப்படி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? உண்மையான திராவிட மாடல் அ.தி.மு.க. ஆட்சிதான். தேர்தல் நேரத்தில் தேசிய கட்சிகளாக இருந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com