சட்டமன்ற தேர்தலில் திமுக வரலாறு படைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

சென்னையில் திமுக கொடிதான் பறக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக வரலாறு படைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை கொளத்தூரில் வாகனத்தில் சாலைவலமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை நான் பாசமாக வளர்த்த குழந்தை மாதிரி. கொளத்தூர் என் செல்லக்குழந்தை. ஆண்டு முழுதும் நான் நன்றாக படித்த மாணவன் தேர்வுக்கு முன்னதாக ரிவிஷன் செய்வதுபோல் வந்துள்ளேன். நான் வாக்கு கேட்டு வர வேண்டுமென எதிர்ப்பார்க்க மாட்டீர்கள். கொளத்தூர் மக்களின் அன்பு அப்படி.10 நாட்களுக்கு ஒரு முறை இங்கு வருவேன். நான் செய்த பணிகள்தான் எனக்காக வாக்கு கேட்கிறது.

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சென்னை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. தலைநகரை தத்தளிக்கவைத்த ஆட்சி அதிமுக. சென்னை வளர வேண்டுமென்றால் திமுகதான் வேண்டும் என்று பிரசாரத்தை நிறைவு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com