தி.மு.க. ஆட்சிக்கு வர கூடாது: விஜய் நல்ல முடிவை எடுக்க வேண்டும்: பா.ஜ.க. அழைப்பு

தி.மு.க.வை வெற்றி பெற வைக்கும் முயற்சிக்கு விஜய் துணை போக கூடாது என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வர கூடாது: விஜய் நல்ல முடிவை எடுக்க வேண்டும்: பா.ஜ.க. அழைப்பு
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் தனது லட்சியம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார் இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும்.ஆட்சி, அதி காரம், யாருக்கு எத்தனை சீட்? யார் முதல்-அமைச்சர் என்பதை விட, யார் முதல்-அமைச்சராக வரக்கூடாது? என்பதுதான் நம் ஒவ்வொருவரின் சிந்த னையாக இருக்க வேண்டும். தி.மு.க.வை வெற்றி பெற வைக்கும் மறை முக முயற்சிக்கு விஜய் துணை போக கூடாது.

தமிழக மக்களின் நலன் காக்க, தி.மு.க.வை விரட்டக்கூடிய இந்த அரசியல் போர்க்களத்தில் மாபெரும் சரித்திர நாயகனாக விஜய் துணிந்து ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

மக்கள் நல அரசியல்வாதியாக, வரலாறு போற்றக் கூடிய வகையில் இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும். உங்களுக்கான தகுதியான இடத்தை தேசிய ஜனநாய கக் கூட்டணி நிச்சயம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com