சங்கரன்கோவிலில் தி.மு.க. கையெழுத்து இயக்கம்

சங்கரன்கோவிலில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
சங்கரன்கோவிலில் தி.மு.க. கையெழுத்து இயக்கம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கவேலு, மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வர்த்தகர் அணி இணைச்செயலாளர் முத்துசெல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா சவுந்தரராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com