குஷ்பு, கவர்னர் குறித்து அவதூறு விமர்சனம்: சிறை தண்டனை பெற்ற தி.மு.க. பேச்சாளர் மேல்முறையீடு

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
குஷ்பு, கவர்னர் குறித்து அவதூறு விமர்சனம்: சிறை தண்டனை பெற்ற தி.மு.க. பேச்சாளர் மேல்முறையீடு
Published on

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடந்த பொதுக்கூட்டத் தில் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியையும், நடிகை குஷ்புவையும் கடுமையாக விமர்சனம் செய் தும், அவதூறாகவும் பேசிய வழக்கில், சென்னை எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பி.ரேவதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் அராதமும் விதித்து கடந்த பிப்ரவரி 13-ந்தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், "ஆதாரங்களை, சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் எழும் பூர் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளது.. விமர்சனத்துக்கு உள்ளான தனி நபர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. போலீசார் பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட இந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com