சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!

சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!
Published on

சென்னை,

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

பதிலுரை

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார்.

பதிலளிக்க அனுமதி மறுப்பு

இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ததால் திமுகவுக்கு பேச அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் கூறியதால், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

20 நிமிடங்கள் அமளி

சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டநிலையில், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com