தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

வலிவலத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வலிவலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றியக் குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன், தலைமை கழக பேச்சாளர்கள் சாதுராஜன், ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com