தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

திட்டச்சேரியில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
Published on

திட்டச்சேரி:

திட்டச்சேரி பஸ் நிலைய வளாகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பேரூர் கழக அவைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான் வரவேற்றார். கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், தலைமை கழக பேச்சாளர்கள் அருள்தாஸ், ஆரூர்மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய பிரதிநிதி முகமது ரபி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com