மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல்

வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல் கூறினார்.
மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல்
Published on

நெல்லையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டீன் ரேவதி பாலனிடம் கேட்டறிந்தார்.

மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com