முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஆபாச பேச்சு: திமுக ஆதரவாளர் கைது

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜா.
முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஆபாச பேச்சு: திமுக ஆதரவாளர் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜா. ஆப்பிள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர் திமுக ஆதரவாளர் ஆவார். சமூகவலைதளத்தில் டிஜிட்டல் கிரியேட்டராகவும் ஜேம்ஸ் ராஜா செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ஜேம்ஸ் ராஜா தனது சமூகவலைதள பக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஆபாச கருத்துகளை தெரிவித்து வந்தார். கோவை சிறுமி கொலை வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்களில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக பேசி ஜேம்ஸ் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் ராஜாவை திருநெல்வேலி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முதல்-அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி சமூகவலைதளங்கள் பதவியேற்றிய ஜேம்ஸ் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com