'தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது' - ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
'தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது' - ஆர்.எஸ்.பாரதி
Published on

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவிற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அழுத்தம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று கூறிய விஜய், "வேங்கைவயலில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோன்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்" என்று விமர்சித்தார்.

அதே சமயம், விஜய்யின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளிடம் இருந்து தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பலவீனமாக இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க.-வி.சி.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க. மற்றும் வி.சி.க. இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. இந்த கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. விஜய்தான் மைனஸ் ஆகப் போகிறார். கலை உலகில் மைனஸ் ஆனதால்தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com