

சென்னை,
முதல்-அமைச்சர் பேச்சைக் கேட்டு திணறி திமுக வெளியேறியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நேற்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் தனது உரையை முடிக்கும் முன்பே எதிர்கட்சி தலைவர் உதயநிதி உட்பட தி.மு.க உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையை விட்டு வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத்தை முதல்-அமைச்சர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியுள்ளதாகவும் சினிமா தியேட்டர் போல ஆக்கிவிட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், தமிழக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியாதாவது:-
"முதல்வர் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சையும், அதில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிப் போய் அவையை விட்டு வெளியேறியது. நடிப்பின் உச்சகட்டத்திலிருந்து முழுநேர அரசியலுக்கு வந்துள்ள அவர் சட்டசபையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் செல்வாக்குடன் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்." இவ்வாறு கூறினார்.