முதல்-அமைச்சர் பதிலுரைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

சட்டசபை நிறைவு நாளான இன்று முதல்-அமைச்சர் விஜய் பதிலுரையாற்றினார்.
முதல்-அமைச்சர் பதிலுரைக்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
Published on

சென்னை,

சட்டசபை

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

அதன்பின்னர், 19 மற்றும் 22-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.

திமுக வெளிநடப்பு

அப்போது முதல்-அமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது குறுகீட்ட சபாநாயகர் முதல்-அமைச்சர் உரை நிறைவு பெற்றவுடன் பேச அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார்.

இருப்பினும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களை அமரும் படி, சபாநாயகர் மற்றும் அவை முன்னவர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் உரையாற்றினார். இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com