தவெக அரசின் அடக்குமுறைகளுக்கு திமுக அடிபணியாது; கனிமொழி எம்.பி.

அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் இன்று கைது செய்தனர்
தவெக அரசின் அடக்குமுறைகளுக்கு திமுக அடிபணியாது; கனிமொழி எம்.பி.
Published on

சென்னை,

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைத்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை இன்று கைது செய்தனர். முன் ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் அவரை ஆத்தூர் போலீசார் இன்று கைது செய்தனர்

கனிமொழி கண்டனம்

இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com