திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது- மு.க .ஸ்டாலின்

திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது- மு.க .ஸ்டாலின்
Published on

சென்னை

தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது.

ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது, தமிழக அரசு இது குறித்து கவலைப்படவில்லை. சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

மாயமான மீனவர்கள் குறித்து, முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com