திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை நந்தனத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Published on

சென்னை,

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com