தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது.
தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
Published on: 

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவி கமலா நேரு, மகளிர் தொண்டர் அணி தலைவி ஜெயமாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், தொண்டர் அணி அமைப்பாளர் ஆண்டனி அல்பின் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில், வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராமான மகளிர் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட துணைச்செயலாளர் கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவி தமயந்தி, பொதுக்குழு உறுப்பினர் களக்காடு நகராட்சி தலைவி சாந்தி சுபாஷ் மற்றும் துணைத்தலைவர்கள் சந்திரகலா, ஜெனிபர் தினகர், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com