

நெல்லை,
ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக திமுகவை சார்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் முதல்-அமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்தநிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளியே வந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆயிரம் சிறைச்சாலைகளை சந்திக்க திமுக தொண்டர்கள் தயாராகவே உள்ளனர். சிறையில் அடைப்பதால் என்னை ஒடுக்கிவிட முடியாது. எத்தனை வருடங்கள் சிறையில் இருந்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்.
சட்டப்பேரவையில் கடுமையான எதிர்வினைகளை திமுக கொடுக்கும் என்றார்.