தி.மு.க. செயற்குழு 18-ம் தேதி கூடுகிறது; துரைமுருகன் அறிவிப்பு

வரும் 18-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 18-12-2024 (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com