விமானத்திலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதே திமுகவின் சாதனை: டிடிவி தினகரன்

திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விமானத்திலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதே திமுகவின் சாதனை: டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் கைது – வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனைகளின் நீட்சி...

விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர்தான் என்பது தெரியுமா? தெரியாதது போல நடிக்கிறாரா?

எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com