திமுக ஒட்டிய 'கோழி முட்டை' போஸ்டர்: தமிழிசை பதிலடி
சென்னை,
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 'கோழி முட்டை' படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதாவது, 'முட்டை' படத்தின் கீழ், "பா.ஜ.க. - அ.தி.மு.க. ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
இந்த 'கோழி முட்டை' படம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஒருவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "மத்திய பட்ஜெட்டை முட்டை என்று கிண்டல் செய்யும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.வை சார்ந்தவர்களே.. இதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் முட்டை பூஜ்ஜியம் அல்ல.. அது உயிர், வளர்ச்சி, பல மடங்கு பெருக்கம்!" என்று தெரிவித்துள்ளார்.

