

சென்னை,
முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கம் சென்றால் அது ஹேக்கர் படத்துடன் இருப்பது போன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. அதன்கீழே புத்தாண்டு வாழ்த்தினையும் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
இணையதள பாதுகாப்பு பற்றி இன்னும் கற்று கொள்ள வேண்டும் என்றும் ஹேக்கர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி தி.மு.க.வின் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.