நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் பெண்களுக்கு சாதகமானதுதான்- டெல்லி முதல் மந்திரி

தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. நடத்தும் போராட்டம் அர்த்தமற்றது என்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறினார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் பெண்களுக்கு சாதகமானதுதான்-  டெல்லி முதல் மந்திரி
Published on

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, கோவையில் கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று கோவையில் நிருபர்களுக்குபேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து பெண்களும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை அவமதித்து வருகிறார் . திருச்சியில் கூட தி.மு.கவின் இலவச கூப்பன் விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

அவர்கள் அந்த பெண்ணை அவமதித்து இழிவு படுத்தியுள்ளனர்.இந்த அரசாங்கம் ஒரு பாதுகாப்பற்ற அரசாங்கம் . இங்கு தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள் தி.மு.க.வின் இந்த போராட்டம் அர்த்தமற்றது.

தொகுதி மறுவரையறை, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை பெண்களுக்கு சாதகமான ஒன்றுதான். தி.மு.க.வினர் பெண்கள் முன்னேற வேண்டாம் என்று நினைக்கிறார்கள் தி.மு.கவின் உதயசூரியன் சின்னம் என்பது , அஸ்தமனமாக கூடிய சூரியன் . முதல்-அமைச்சர் பெண்களுக்கு எதிரானவர்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com