

சென்னை
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில், தி.மு.க.வை வன்னி அரசு கடுமையாக சாடியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்து இருப்பது, திருப்பரங்குன்றம் தீர்ப்பை விட பேரதிர்ச்சி தருகிறது என திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறும்போது, நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வடமாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான சதவீதத்தை குறைத்திருப்பார்கள்.
ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய மூன்றாண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள்.
அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்து விட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது என்று பேசினார்.
இந்நிலையில், அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், பா.ஜ.க. எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக தி.மு.க. அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும். மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான தி.மு.க. இப்படி கள்ளத்தனமாக பா.ஜ.க.வுடன் கைகோர்த்து தமிழ்நாட்டின் 'முதுகுத்தியாக' மாறுவதை தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? தி.மு.க.வின் இந்த இரட்டைத் துரோகத்தை, இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது என தெரிவித்து உள்ளார்.