

காஞ்சிபுரம்,
சட்டசபை தேர்தல் பரப்புரையை திருவாரூரில் முதல்-அமைச்சர் நாளை தொடங்க உள்ளார். பேரறிஞரின் நினைவு இல்லத்தில் மரியாதை செய்து காஞ்சிபுரத்தில் இன்று நான் தொடங்கியுள்ளேன். ஆனால், பாஜக போட்டியிடும் தொகுதியான மயிலாப்பூரில் தனது பரப்புரையை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
மக்களை சந்திக்க என்றுமே நாங்கள் பயந்தது இல்லை; மக்களை சந்திக்கும் இயக்கம் திமுக. முதல்-அமைச்சர் தான் எனக்கு ரோல் மாடல்.
புதியவர்கள், படித்தவர்கள், பெண்களுக்கு திமுகவில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது திமுக. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.40 கோடியில் மஞ்சள் நீர் கால்வாய் சீர் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றினோம். ஜாடிக்கேற்ற மூடி போல மோடிக்கேற்ற அடிமையாக உள்ளார் பழனிசாமி. மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டிய தேர்தல் இது என்றார்.