தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு; 30,784 பேர் எழுதுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 30,784 பேர் எழுதுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு; 30,784 பேர் எழுதுகின்றனர்
Published on: 

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 30 ஆயிரத்து 784 பேர் எழுதுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

30,784 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்படும் குரூப்-2, 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான தேர்வுகள் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்வு மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 4 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடக்கிறது. தூத்துக்குடியில் 51 மையங்களில் 15 ஆயிரத்து 295 பேரும், கோவில்பட்டியில் 32 மையங்களில் 9 ஆயிரத்து 104 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மையங்களில் 1,638 பேரும், திருச்செந்தூரில் 16 மையங்களில் 4 ஆயிரத்து 747 பேரும் ஆக மொத்தம் 105 மையங்களில் 30 ஆயிரத்து 784 பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணிக்காக 22 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

அனுமதி கிடையாது

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தேர்வுக்கூடத்தில் உரிய நேரத்தில ஆஜராக வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு கூடத்துக்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின்னணு சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com