

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தரப்பில், ஜூலை மாதமே தலைமைச் செயலரிடம் எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து புகார் அளிக்கப்பட்டதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், அது அரசுக்கு தர்மசங்கடமாக ஆகிவிடும் என்று ஐகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது: தலைமைச் செயலரிடம் புகார் அளித்த பிறகும், விசாரணை நடக்காதது ஏன்? உள் விசாரணைக் குழு எப்போது அமைப்பீர்கள்? என்றும் இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், அவ்வாறு செய்தால் அது அரசுக்கு தர்மசங்கடமாகிவிடும் . ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால், புகார் இந்த அளவுக்கு வந்திருக்காது” என்றார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரே வழக்கின் விசாரணை அதிகாரி என்று கோர்ட்டில் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு, எஸ்பிக்கு பதில் வேறு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஐஜி அல்லது டிஐஜி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற அரசு விரும்பவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில், விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது.