

சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் படூரில் ஏரியை மணலால் நிரப்பி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது.
மாநில அரசே நீர்நிலைகளில் ஆக்கிரமிக்க கூடாது எனவும் நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் நீர்நிலைகள் மேல் பாலம் அமைத்து சாலை அமைக்கலாம் என நீதிபதி ஆலோசனை வழங்கினர்.
மேலும், நீர்நிலைகளை தமிழக அரசு ஆக்கிரமிக்க கூடாது என உத்தரவிட்டு, இது குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.