முதல்-அமைச்சர் விஜய்யை 6 மாதங்கள் விமர்சிக்க வேண்டாம்- வைகோ

அதிகாரத்துக்கு விஜய் புதியவர். நிர்வாகத்துக்குள் அவர் சென்ற பின்னர் தான் கஜானா காலியாக உள்ளது என்பது தெரிகிறது என்று வைகோர் கூறினார்.
வைகோ
வைகோ (கோப்பு படம்)
Published on

தஞ்சையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்ககூடாது என்று அழுத்தம் கொடுக்க நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதே போல் தென்காசி மாவட்டம் வாசுதே வநல்லூரில் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

மன்னிக்க முடியாது

தமிழக கவர்னர் அர்லேகர் திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தியதை மன்னிக்க முடியாது. திருவள்ளுவருக்கு காவி ஆடை போர்த்தியது திட்டமிட்டு நம்மை உசுப்பி பார்ப்பது போல் ஆணவத்துடன் செய்துள்ளார். இந்த செயல் தொடருமானால் கவர்னர் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் ம.தி.மு.க. கருப்புக்கொடி காட்டும்.முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகின்றன. அதிகாரத்துக்கு அவர் புதியவர். நிர்வாகத்துக்குள் அவர் சென்ற பின்னர் தான் கஜானா காலியாக உள்ளது என்பது தெரிகிறது. அவருக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை அவரை விமர்சிக்க வேண்டாம்.உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நிர்வாகக்குழு கூட்டம் கூட்டி ம.தி.மு.க.நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். அதேநேரத் தில் தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்கிறது.

வாழ்நாள் சிறை

தமிழகத்தில் சிறு குழந்தைகளை நாசமாக்குவது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. பாலியல் வன்முறையில் ஈடு பட்டு கொலை செய்பவர்களுக்கு பிணை விடுதலை வழங்கக் கூடாது. அவர்களுக்கு வாழ் நாள் சிறை தண்டனை வழங்கும் விதமாக குற்றவியல் சட்டத்தை திருத்தி மாநில அரசுகள் தீர் மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, அதை சட்டமாக்க வேண்டும்.போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். பிரதமர் மோடி பல ஆண்டுகளாக யாரையும் சந்திப்பது இல்லை. அவரை போல் எந்த அரசியல்வாதியாலும் நகைச்சுவை செய்ய முடியாது. முதல்-அமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அவர்களை தவிர்க்க கூடாது என்பது தான் எனது வேண்டுகோள்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com