இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம்: புதுக்கோட்டை மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்

மீனவர்கள் கடல் எல்லையைத் தொடர்ந்து கண்காணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும்.
இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய வேண்டாம்: புதுக்கோட்டை மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்
Published on: 

புதுக்கோட்டை,

இந்திய சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும்போது, இந்திய சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீன்வளத்துறை அறிவுறுத்தல்

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மீனவர்கள் இந்திய சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லக்கூடாது என்றும், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, கடல் எல்லையைத் தொடர்ந்து கண்காணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X