

சென்னை
ஓ.பன்னீர் செல்வம் ஆதர்வாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செம்மலை எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்து.தொண்டர்களின் கருத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிப்போம். சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம்.எங்களது கோரிக்கையை ஏற்று பேச்சு வார்த்தை நடத்த எடப்பாடி அணி தயாராக இல்லை.பேச்சு வார்த்தைக்கும் முறையாக அழைப்பு விடுக்கவில்லை. எங்களது கோரிக்கைகள் இரண்டேதான்.ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தால் போது. எங்களின் 2 நிபந்தனைகளை ஏற்றால் பேச்சு வார்த்தை. பேச்சுவார்த்தை நடந்தால் நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எம்.எல்.ஏ. கேட்பதை செய்ய்து கொடுக்ககூட்டது என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டு உள்ளது.ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விரைவில் நல்லாட்சி அமையும். ஊழலற்ற ஆட்சியை ஓ.பன்னீர் செல்வத்தால் மட்டுமே தரமுடியும். தொண்டர்களின் விருப்பத்தை தீர்மானத்தின் மூலமாக நிறைவேர்றி உள்ளோம். நாங்கள் ஓபன்னீர் செல்வம் பின்னால் நிற்போம்
இவ்வாறு அவர் கூறினார்.