முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் வரும் புள்ளி மான்களை புகைப்படம் எடுக்க கூடாது: வனத்துறை எச்சரிக்கை

முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
புள்ளி மான்கள்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இது தவிர முகாம்களில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதுமலை காப்பகத்தை ஒட்டியுள்ள, சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சாலை ஓரங்களில் இங்குள்ள புள்ளி மான்கள் சில சமயம் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. மேலும் அப்பகுதிகளில் உள்ள புற்களை சாப்பிட வரும் புள்ளி மான்கள் அங்கே உள்ள சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.

வனத்துறை அதிகாரிகள் அறிவுரை:

இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வரும் புள்ளி மான் கூட்டத்தை புகைப்படம் எடுக்க கூடாது என்றும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com