வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுவர்களை தனியாக கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் - வனத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கடந்த 16-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுவர்களை  தனியாக கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் - வனத்துறை அறிவுறுத்தல்
Published on

வால்பாறை,

தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கடந்த 16-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அனைத்து எஸ்டேட் பகுதி தொழிலாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் தங்களது பிள்ளைகளை வனப்பகுதிகளுக்குள் அழைத்து செல்லக்கூடாது. மாலை நேரத்தில் சிறு குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விட வேண்டாம்.

சிறுவர், சிறுமிகளை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்கி வர மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே அனுப்ப வேண்டாம். குடியிருப்பை ஒட்டிய தேயிலை செடிகள் உள்ள இடங்களில் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள வேண்டும். சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து குழந்தைகளை தற்காத்து கொள்ள மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றனர். இந்த கோடை விடுமுறை நாட்களில் சிறுவர்களை மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதிக்க கூடாது. எனவே பெற்றோர் நீங்கள் தான் உங்களது பிள்ளைகளுக்கு உரிய அறிவுரைகள் சொல்லி பாதுகாக்க வேண்டும் என போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com