சாதி பார்த்து தான் ரத்தம் எடுப்பீர்களா... மாணவர்கள் ஆவேசம்!

பெயர், வயது, படிப்பு, தொலைபேசி விவரத்துடன் சேர்ந்து சாதி விவரமும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரத்த தானத்தில் சாதி
Published on: 

நீலகிரி,

சாதி பார்த்து தான் ரத்தம் எடுப்பீர்களா என மாணவர்கள் ஆவேசமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரத்த தானம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசுக் கலைக் கல்லூரியில் நேற்று சுகாதார துறை சார்பில் ரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துக் கொண்டு ரத்தம் தானம் செய்தனர். இதில் பங்கேற்ற இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மேரா யுவ பாரத் அமைப்பை சேர்ந்த ஒருவர் ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கியுள்ளார்.

மாணவர்கள் ஆவேசம்

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் பெயர், வயது, படிப்பு தொலைபேசி விவரத்துடன் சேர்ந்து சாதி விவரமும் கேட்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த தானம் செய்ய வந்த மாணவர்களில் சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, சாதி பார்த்து தான் ரத்தம் எடுப்பீர்களா என கேள்வி எழுப்பி ஆவேசம் அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com