

சென்னை,
மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் எத்தனை பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் தான் புறநகர் ரெயில்களின் சேவையும் பராமரிப்பு பணிகள் காரணமாக குறைக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இது குறித்து, மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 96,40,993 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 20.02.2026 அன்று 3,99,503 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2026, பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 49,11,328 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,121 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,91,544 பயணிகள் (Single journey Paper QR /Token 19,10,265; Online QR – 1,26,618; Static QR 2,11,188; Whatsapp - 4,51,491; Paytm 3,27,534; ONDC – 11,47,636; PhonePe – 2,70,088; CMRL Mobile App 64,649; Chennai One App – 1,59,134; Event QR - 22,941) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், டிஜிடல் எஸ்விபி (Digital SVP), க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித க்யுஆர் பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.