

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
அவ்வாறு நடைபயிற்சி செய்ய சென்றபோது, பைக் ஒன்றில் சவாரி செய்வதுபோல் அவர் போஸ் கொடுத்திருந்தார். இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சுசூகி நிறுவனத்தின் ஹயாபுஷா வகையை சேர்ந்த இந்த சொகுசு பைக்கின் விலை ரூ.18 லட்சம் ஆகும். இந்த பைக்கில் மணிக்கு 312 கி.மீ. வேகத்தில் செல்ல முடியுமாம்.