வைகோவின் வெற்றி எதில் இருக்கிறது தெரியுமா? வைரமுத்து பதிவு

வைகோவின் நடைப்பயணத்தின்போது தொண்டர்கள் மட்டுமல்ல என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
வைகோவின் வெற்றி எதில் இருக்கிறது தெரியுமா? வைரமுத்து பதிவு
Published on

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

நேற்று மதுரையிலிருந்தேன் வைகோவின் சமத்துவ நடைப்பயணநிறைவு விழாவில் கலந்துகொண்டேன் ஒரு மலையின் அழகுஎதில் இருக்கிறது?அதன் ஒழுங்கற்றஒழுங்கில் இருக்கிறது.ஒரு பறவையின் வெற்றிஎதில் இருக்கிறது?மொத்த வானத்தையும்மறக்கடித்துவிட்டுத் தன்னை மட்டுமே கவனிக்கச் செய்யும் தந்திரத்தில் இருக்கிறதுஅதுபோல் வைகோவின் வெற்றிஎதில் இருக்கிறது?வெற்றிகளையும்தோல்விகளையும்காலடியிலிட்டு மிதித்துக்கடந்துகொண்டேஇருப்பதில் இருக்கிறதுவைகோவின்நடைப்பயணத்தின்போது

தொண்டர்கள் மட்டுமல்ல;சத்தியம் நடந்து வந்தது;லட்சியம் நடந்து வந்தது;தமிழ் நடந்து வந்தது மிச்சமிருக்கும் ஆண்டுகளிலும்அவர் தொடர்பயணத்தில் துணையிருங்கள் தோழர்களே!இந்த நடைப்பயணம் போதைக்கு எதிராகவும் போர் தொடுக்கிறது போதை என்பது உள்ளூர்த் தீமையல்ல;உலகத் தீமை உலகில் 30 கோடி போதை அடிமைகள் உள்ளதாக ஐ.நா அறிவிக்கிறதுதமிழ்நாட்டை விட்டு மது வெளியேறாமல் இருக்கலாம்.ஆனால், மதுவை விட்டுத் தமிழர்களே வெளியேறுங்கள்என்று பேசினேன். துரை வைகோ எம்.பி வரவேற்றார் நடிகர் சத்யராஜ் வெங்கடேசன் எம்.பிவாழ்த்துரைத்தார்கள் நல்ல கூட்டம்;கண்ணுக்குத் தெரியவில்லை கடைசி மனிதன்"  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com