2025ல் உடல் உறுப்புகள் தானத்தில் முதல் 5 மாநிலங்கள் எது தெரியுமா?

மாநிலம் வாரியாக உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் உடல் உறுப்புகள் தானம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மாநிலம் வாரியாக உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 267 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 267 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 205 பேரின் உடல் உறுப்புகள் தானத்துடன் தெலுங்கானா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. 198 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு கர்நாடகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
153 பேர் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மராட்டியம் 4-வது இடத்திலும், குஜராத்தில் 152 பேரின் உடல் உறுப்புகளும் தானமாக பெறப்பட்டு 5 -வது இடத்தையும் பிடித்துள்ளது.
Related Tags :
Next Story






