டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் அத்துமீறி நுழைந்து டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மகப்பேறு மருத்துவர்களின் பணி சுமையை குறைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com