ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் அப்போலோ தாக்கல் செய்தது

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்தது. #JayalalithaaDeath #Apollo
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் அப்போலோ தாக்கல் செய்தது
Published on

சென்னை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பல்லோ நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரியிருந்தது.

இதனை ஏற்ற விசாரணை ஆணையம் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்தது. நீதிபதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் 2 பெரிய பெட்டிகளில் கொண்டு வரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சுவாமிநாதன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் தான் மருத்துவர் சுவாமிநாதன்.

#Jayalalitha #JayalalithaaDeath #Apollo #InquiryCommission #Arumugasamy

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com