தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 14 பணியாளர்களை நாய் கடித்து குதறியது

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த 2 நாட்களில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 14 பணியாளர்களை நாய் கடித்து குதறியது
Published on

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத் திடீரெனத் தாக்கியுள்ளன.

நேற்று, இன்று என 2 நாட்களில் மொத்தம் 14 பணியாளர்கள் நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்திற்குள் நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கு அனல்மின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com