பால் கேனுக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட நாய் பத்திரமாக மீட்பு

பால் கேனின் தகடுகளை துண்டித்து நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அதியனூர்-அதியங்குப்பம் கிராமத்தில் நடமாடிய தெரு நாயொன்று அங்கு திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பால் கேனில் தலையை விட்டுள்ளது. அதன்பின் வெளியே எடுக்க முடியாத அந்த நாய் மூச்சு விட திணறியவாறு தவித்தது.
நாயை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றும் முடியாததால் வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பால் கேனின் தகடுகளை துண்டித்து நாயை மீட்டனர். தப்பித்த நாய் சற்று தூரத்தில் அமர்ந்து அங்கிருந்தவர்களை நன்றியுடன் பார்த்தது மனதை நெகிழச் செய்தது.
Related Tags :
Next Story






