சோளிங்கரில் நாய்கள் தொல்லை

சோளிங்கரில் நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சோளிங்கரில் நாய்கள் தொல்லை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி உட்பட்ட 27 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருவுக்கும் 10 முதல் 20 நாய்கள் வரை சுற்றித்திரிகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்களை விரட்டிச்சென்று கடிப்பதும், துரத்துவதுமாக உள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் பயன் இல்லை. நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com