பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
Published on

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவடைந்துள்ளது.

நாட்டுக்கோழி சந்தை

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான சண்டை சேவல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்திவேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த நாட்டு கோழி சந்தைக்கு அதிகாலை 5 மணியில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் கொண்டுவர தொடங்கினர். சந்தைக்கு பெருவடை, கடகநாத், மயில், காகம், கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டது.

கடந்த வாரம் நாட்டுக்கோழி கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் கோழி ஒன்று ரூ.1,200 முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

தீபாவளி விற்பனை

தீபாவளியை முன்னிட்டு நடந்த நாட்டு கோழி சந்தையில் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகள் கிலோ ரூ.200 முதல் ரூ.350 வரையிலும், சண்டைக்கோழிகள் கோழி ஒன்று ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

நாட்டுக்கோழிகளின் வரத்து அதிகரித்தால் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்தனர். ஆட்டு இறைச்சி ரூ.700 முதல் ரூ.800 வரையிலும், வாத்து ஒன்று ரூ.220 முதல் ரூ.260 வரையிலும் விற்பனையானது. இறைச்சி பிரியர்கள் ஆடு, வாத்து, மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com