மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.
மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
Published on

மின் இணைப்பு பெற தனி நபரிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.

புதிய இணைப்பு

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் போன்ற பல்வேறு தரப்பான மின் இணைப்புகள் அதற்கான பட்டியல் படி மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும். இந்தநிலையில் சில தனி நபர்கள் விருதுநகர் பகுதியில் புதிய இணைப்புகள் பெற காத்திருக்கும் நபர்களை நோட்டமிட்டு அவர்களிடம் திருடப்பட்ட மின் மீட்டர்களை காட்டி இணைப்பு வழங்குவதாக கூறி அதற்கு பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொள்கின்றனர்.

பணம் கொடுக்க வேண்டாம்

இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் இவ்வாறு தனிநபரிடம் மின் இணைப்புக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற்று பயனடைய வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com