'வேலைவாய்ப்பு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை

வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே பகிரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'வேலைவாய்ப்பு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்' - சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தில் காலி பணியிடங்கள் உள்ளதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பணியார்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மட்டுமே பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான விளம்பரங்களை நம்பி இழப்புகள் ஏற்பட்டால் மெட்ரோ நிர்வாகம் பொறுப்பாகாது என்றும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com