தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா.. - பிரேமலதா விஜயகாந்த்

எல்லா தாய்மொழி உரிமை போராளிகளுக்கும் வீர வணக்கம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா.. - பிரேமலதா விஜயகாந்த்
Published on

சென்னை,

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! அன்னை தமிழை காப்போம்! அனைத்து மொழிகளையும் கற்போம்!

தே.மு.தி.க-வின் அசைக்க முடியாத கொள்கை இதுவே! அனைவருக்கும் இனிய உலக தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

இளைஞர்களின் குரல்களால் பன்மொழிக் கல்வியை வளர்ப்போம். தமிழை டிஜிட்டல் உலகில் உயிர்ப்புடன் வைத்து, உலகெங்கும் தமிழனின் பெருமையை நிலைநாட்டுவோம்! கேப்டனின் தமிழ் பெருமைக் கனவை நிறைவேற்றுவோம்.

எல்லா தாய்மொழி உரிமை போராளிகளுக்கும் வீர வணக்கம்!

வாழ்க தமிழ்! வாழ்க உலகின் அனைத்து தாய்மொழிகளும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com